கோவிட் -19 எதிர்கொள்வது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை

 உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட  நிலைக்குழுவால் சமீபத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


முக்கிய பரிந்துரைகள் :

    பெருந்தொற்றுநோய்கள் பரவலின் போது தனியார் மருத்துவமனைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது கட்டுப்பாடுகளை வைத்திருக்க பொருத்தமான சட்ட விதிகளுடன் ஒரு விரிவான பொது சுகாதார சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

    மருந்துகளை பதுக்கி சந்தைப்படுத்துதலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தரமான தயாரிப்பினை உறுதிப்படுத்துதல்.

    மலிவான மற்றும் பயனுள்ள மறுபயன்பாட்டு மருந்துகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவதன் மூலம் மக்கள் அச்சமடைவதை தடுக்கவும், விலையுயர்ந்த மருந்துகளுக்கு பெரும் தொகையை செலவழிக்கவும் அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டுக் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதைத் தடுக்க நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஒழுங்குமுறை மேற்பார்வை இருக்க வேண்டும்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) ஒரு தனி பிரிவு உருவாக்கப்பட வேண்டும், இது எதிர்காலத்தில் COVID-19 போன்ற தொற்றுநோய்களைக் கையாள்வதில் / நிர்வகிப்பதில் நிபுணத்துவம் பெறும்.

    சமூகத்தில் உள்ள மக்களை தனிமை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான பயம் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மக்களை மரியாதையுடனும் கருணையுடனும் நடத்தி மூலம் விழிப்புணர்வடையச்செய்ய வேண்டும்.

    கடன்களைப் பெறுவதில் விவசாயிகள், சிறு/குறு  நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

விரிவான நடவடிக்கைகளின் தேவை :

    தனியார் மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பல தகவல்கள் உள்ளன.

    மேலும், COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த ‘உதவி’ செய்த மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

    தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், COVID-19 நோய்த்தொற்று நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீடு நீட்டிக்கப்படவில்லை.

    ஒன்பது மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டதால், பல குழந்தைகள் பகல்நேர உணவை இழந்தனர். பல மாநிலங்கள் மாணவர்களுக்கு அவர்களது வீட்டிற்க்கே சென்று உணவு பொருட்களை வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடர்ந்தன. ஆனால் இது சீரான முறை அல்ல.

FOR PRELIMS :

  • பாராளுமன்ற மற்றும் அமைச்சரவைக் குழுக்களுக்கு இடையிலான வேறுபாடு.
  • நிலைக்குழுக்கள்.
  • நிதிக்குழுக்கள்
  • இந்த குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை யார் நியமிக்கிறார்கள்?
  • மக்களவை பிரத்தியேக குழுக்கள்.
  • சபாநாயகர் தலைவராக இருக்கும் குழுக்கள்.

FOR MAINS : 

  • பாராளுமன்ற நிலைக்குழுக்கள் என்றால் என்ன? அவை ஏன் அவசியம்? அவற்றின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும்.


Post a Comment

புதியது பழையவை