ஒரு சட்டமன்றத்தை கூட்ட, அல்லது முன்கூட்டியே கலைக்க ஆளுநரின் அதிகாரம் குறித்த சட்டம்

 முன்னுரை :

    விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலை பெற கேரள அரசு முயற்சி.

அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் :

   ஒரு சட்டமன்றத்தை கூட்ட, அல்லது முன்கூட்டியே கலைக்க ஆளுநரின் அதிகாரத்தை கையாளும் இரண்டு விதிகள் அரசியலமைப்பில் உள்ளன.

1. பிரிவு 174 (2) (a) இன் கீழ், ஒரு ஆளுநர் தேவையான நேரத்திலும் இடத்திலும் சபையை கூட்ட முடியும்.

2. பிரிவு 163 அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி  அமைச்சரவையை கூட்ட முடியும். அரசியலமைப்பு சட்டதின்படி ஆளுநர் விருப்பப்பட்டால் அவர்களின் ஆலோசனையின்றியும் கூட்டத்தை கூட்ட முடியும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி :

    அருணாச்சல பிரதேசத்தில் அரசியலமைப்பு நெருக்கடியின் விளைவாக உருவான நபாம் ரெபியா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் (2016) தீர்ப்பு, “அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி ஆளுநர் சபையை கூட்ட, அல்லது முன்கூட்டியே கலைக்கவும் முடியும்”.

    ஆனால், முதல்வரும் அல்லது அவரது அமைச்சர்கள் சபையும் சபையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆளுநருக்கு நம்புவதற்கு காரணங்கள் இருந்தால், வாக்கெடுப்பு சோதனைக்கு (நம்பிக்கை இல்லா தீர்மானம்) உத்தரவிட முடியும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

FOR PRELIMS :

  • பிரிவு 163 மற்றும் 174 பற்றிய குறிப்பு
  • முதலமைச்சரை நியமிப்பது யார்?
  • ஆளுநரின் அதிகாரங்கள்.
  • ஆளுநரின் பதவிக்காலம்.
FOR MAINS :

  • மாநில ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பு.

SOURCE : THE HINDU

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை