உணவுகளில் உள்ள கொழுப்பு அளவிற்கான வரம்பை FSSAI குறைத்துள்ளது


முன்னுரை :

        இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) எண்ணெய் மற்றும் கொழுப்புகளில் உள்ள மாறுபக்க கொழுப்பு அமிலங்களின் (Trans Fatty Acids) அளவை உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடு) விதிமுறைகள் மூலம் தற்போதைய அனுமதிக்கப்பட்ட வரம்பான 5% இலிருந்து 2021 க்கு 3% ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 2% ஆகவும் குறைத்துள்ளது.

பின்னணி :

        திருத்தப்பட்ட இந்த கட்டுப்பாடு சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள், வனஸ்பதி (ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள்), வெண்ணெய், பேக்கரி பொருட்கள் போன்றவற்றிற்கும் பொருந்தும்.

கட்டுப்பாட்டின் தேவை :

         மாறுபக்க கொழுப்புகள் மாரடைப்பு (heart attacks) மற்றும் இதயக் குழலிய நோய் (Cardiovascular disease) போன்றவற்றை ஏற்படுத்தி அதிகமாக இறப்பை உண்டாக்குகின்றன.

1. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மாறுபக்க கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன.

2. 2023 க்குள் மாறுபக்க கொழுப்புகளை உலகளவில் அகற்றவும் WHO பரிந்துரைத்துள்ளது.

மாறுபக்க கொழுப்புகள் என்றால் என்ன ?


  • மாறுபக்க கொழுப்பு அமிலங்கள்  அல்லது மாறுபக்க கொழுப்புகள் மிகவும் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளாகும், அவை வேறு எந்த உணவுக் கூறுகளையும் விட நம் உடலில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • இந்த கொழுப்புகள் பெரும்பாலும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றன, ஆனால் நமது உடலில் ஒரு சிறிய அளவு இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • ஹைட்ரஜன், எண்ணெயுடன் வினைபுரிந்து தூய நெய் / வெண்ணெய் போன்ற கொழுப்புகளை உருவாக்கும்போது செயற்கை மாறுபக்க கொழுப்புகள் உருவாகின்றன.
  • நமது உணவில் செயற்கை மாறுபக்க கொழுப்புகளின் முக்கிய ஆதாரங்கள் ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள் / வனஸ்பதி / வெண்ணெய் ஆகும், அதே நேரத்தில் இயற்கை மாறுபக்க கொழுப்புகள் சிறிய அளவில் இறைச்சிகள் மற்றும் பால் பொருட்களில் உள்ளன.

Post a Comment

புதியது பழையவை